மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 (அக்.6) மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் காலியாக இருந்த 7 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கி பரபரப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுப்பெற்றது. அதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேப்போல புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெற உள்ளது.
மாலை 5 மணி நிலவரப்பட்டி தாராபுரத்தில் 78.53 சதவீதமும், மதுராந்தகத்தில் 83.86% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இது நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் குறைவானதே.
இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முக்கிய கட்சிகள் களமிறங்கி போட்டியிட்டு உள்ளன.