மத்தியில் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவானால் அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும். தி.மு.க.வில் உள்ள ‘பவர் சென்டர்கள்’ காரணமாகவே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க. முதன்மை செயலாளரும், எம்.பி.யுமான துரைவைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கம்யூனிஸ்டு கட்சியினர் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதை வரவேற்கிறேன். தற்போது நாங்கள் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக பணியாற்றுகிறோம்.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தொடர்ந்து மறைமுகமாக பேசி வந்தது கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. அதன் காரணமாக ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறின.
இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வுமே காரணம். அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவதற்கும் தி.மு.க.- அ.தி.மு.க. இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் ‘குதிரை பேரம், கழுதை பேரம்’ தான் காரணம் ஆகும்.
மத்தியில் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவானால் அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும். தி.மு.க.வில் உள்ள ‘பவர் சென்டர்கள்’ காரணமாகவே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.