விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் அங்காளம்மன் ஷேச சயன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அச்சமயம் திடீரென்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஒரு பையை எடுத்து வந்தார். அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பையுடன் கோவிலுக்குள் நுழைந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஏறி அங்காளம்மன் அருகில் வேட்பாளர் பட்டியலை வைத்து சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் செய்த பின்னர் பேய் மேடையில் அமர்ந்து சிறிது நேரம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரை புகைப்படம் எடுக்க சூழ்ந்து கொண்டனர்.