தமிழக செய்திகள்

த.வெ.க.-வினர் தங்களது எல்லையை அறிந்து செயல்பட வேண்டும்- புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

தவெகவினர் மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் ஈடுபட வேண்டும்.

பல்வேறு இடங்களில் தவெகவினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

தவெகவினர் தங்களது எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் என்.ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தவெகவினர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவது, ஆய்வு மேற்கொள்ளக்கூடாது.

தவெகவினர் மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் ஈடுபட வேண்டும். ஆனால், கட்சியினர் தங்களது எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.