சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் முனையம் முன்பாக சாலையில் பஸ்கள் நிற்காது. பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் இறங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.