அரசு பேருந்துகள், அமைச்சர் சிவசங்கர் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை- அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னையில் 2 ஆயிரம் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை:


இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட தற்போது வாய்ப்பில்லை.

சென்னையில் 2 ஆயிரம் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் அமைக்கப்படும். 

அதேபோல், பேருந்துகளில் பெண்களின் வசதிக்காக அவசரகால பட்டன்களும் அமைக்கப்படும். சிசிடிவி, அவசரகால பட்டன்கள் ஆகியவை கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT