தமிழக செய்திகள்

நெல்லை அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து - 20 பேர் காயம்

படுகாயம் அடைந்தவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.