தமிழக செய்திகள்

பூந்தமல்லி அருகே பஸ் மோதி இளம்பெண் பலி

விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பூந்தமல்லி அருகே பஸ் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் அருகே உள்ள ஆண்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ (வயது34), பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார்.

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்து கீழே இறங்கி நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் தனியார் கம்பெனிக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வந்து கொண்டு இருந்தது.

விபத்து பலி

திடீரென அந்த பஸ், நித்யஸ்ரீ சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நித்யஸ்ரீ பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான நித்யஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT