ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் (Squash) கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் ஜோஷ்னா செல்லப்பா மற்றும் வேலவன் செந்தில் குமாருக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுகளுடன் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் (Squash) விளையாட்டின் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.