தமிழக செய்திகள்

ஜி.பே. மூலம் லஞ்சம் - 2 எஸ்.ஐ., போலீஸ்காரர் சஸ்பெண்ட் - கமிஷனர் அமல்ராஜ் நடவடிக்கை

லஞ்சம் வாங்கும் காவலர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ், காவலர் விவேக் ஆகிய இருவர் மீதும் லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை காவல் துறையில் பணிபுரியும் போலீசார் லஞ்சம் வாங்கக்கூடாது என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டு உள்ளார். இதை மீறி லஞ்சம் வாங்கும் காவலர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ், காவலர் விவேக் ஆகிய இருவர் மீதும் லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஜி.பே மூலம் இருவரும் லஞ்சம் வாங்கி இருப்பது உறுதியானதை தொடர்ந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று மாதவரத்தில் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீதும் நடவடிக்கை பாய்ந்து உள்ளது அவரையும் கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT