முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

தமிழக அரசு பள்ளிகளில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் இப்போது 8ம் வகுப்பு வரை விரிவாக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வரும் 22ம் தேதி திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் நேரில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.

காலை உணவு திட்ட விரிவாக்கம்

திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் அன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் விஜய் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.

SCROLL FOR NEXT