தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

தாமரை பூவை பறிக்க ஜனதுவிசா, அவரது தம்பி நிதர்ஷன் ஆகிய இருவரும் தண்ணிரில் இறங்கியதாக தெரிகிறது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராம்கி. இவரது மகள் ஜனதுவிசா, மகன் நிதிர்ஷன்(வயது5).

நேற்று காலை ஜனதுவிசா, நிதிர்ஷன் ஆகியோர் பக்கத்து வீட்டை சேர்ந்த தோழி மற்றும் அவரது பாட்டியுடன் குடியிருப்புக்கு அருகில் உள்ள பொன்னியம்மன் கோவில் குளத்திற்கு சென்றனர். அப்போது குளத்தில் உள்ள தாமரை பூவை பறிக்க ஜனதுவிசா, அவரது தம்பி நிதர்ஷன் ஆகிய இருவரும் தண்ணிரில் இறங்கியதாக தெரிகிறது. இதில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதனை கண்டு கரையில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கிய ஜனதுவிசா, நிதிர்ஷன் ஆகிய 2 பேரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் நிதர்ஷன் பரிதாபமாக இறந்தான். அவரது அக்காள் ஜனதுவிசாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.