தமிழக செய்திகள்

திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகன் குவாரியில் இளைஞர் சடலம்!

ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான குவாரியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

சமீபத்தில், கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே உள்ள கல் குவாரியில் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை தாக்கியதான்மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று தெரியாதவர்களுக்கு பரிட்சயமானவர் தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டி.

இந்நிலையில் அவரது மகனுக்கு சொந்தமான குவாரியில் இளைஞர் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் உள்ள எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான குவாரியில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல்போன கருப்பசாமி என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

குவாரியில் எம் சாண்ட் மணல் குவியலுக்குள் இளைஞர் சடலம் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த விவரங்கள் காவல்துறை விசாரணைக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே எம்.எல்.ஏ. பழனியாண்டிமீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.