தமிழக செய்திகள்

போடியில் ஜவுளி குடோனில் தீ விபத்து

ஜவுளிகள் அந்த குடோனில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் மாடியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் உடனடியாக தீ அணைக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் விபத்து நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் போடி பழைய பஸ் நிலையம் பகுதியில் ஜக்கமநாயக்கன்பட்டி முதல் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

ஜவுளி குடோன்

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்பதால் சுப்பிரமணிக்கு சொந்தமான வீட்டையும் வாடகைக்கு எடுத்து சேகர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்துள்ளார். தீபாவளிக்காக மதுரை, ஈரோடு, சேலம், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அதிக அளவு ஜவுளி, பனியன்கள், சொட்டர்கள் ஆகியவை கொள்முதல் செய்து சாலையோர வியாபாரிகளுக்கு வினியோகம் செய்தும் வந்தார். இந்த ஜவுளிகள் அந்த குடோனில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை மாடியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

ஜவுளி துணிகள்

ஜவுளி துணிகள் வைக்கப்பட்டு இருந்த அறையில் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கோடிக்கணக்கில் சேதம்

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து விட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்த நிலையில் குடோனில் இருந்த தையல் மிஷின்கள், மின் விசிறிகள், விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஜவுளி மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. சுமார் ரூ.2 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தீ வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் உடனடியாக தீ அணைக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் விபத்து நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT