நயினார் நாகேந்திரன்  
தமிழக செய்திகள்

மேலிட அழைப்பு - டெல்லி விரைந்தார் நயினார் நாகேந்திரன்

பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூவும் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

பாஜக மேலிடம் அழைப்பு விடுத்த நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து பேசவும், பாஜகவில் இருந்து பிரிந்த சென்ற அண்ணாமலை ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்தும் தலைமையிடம் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை

கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்திற்கு அதிக ஆதரவு குவிந்து வருகிறது.

ஒரு காலத்தில் தமிழகத்தின் பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலையின் விலகல் மற்றும் அவர் தொடங்கியுள்ள இயக்கம் பாஜகவுக்கு தமிழகத்தில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன்

இதனிடையே தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சில காலமாக சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.

அண்மையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்து சொந்த கட்சியினரியிடையேயும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூவும் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த சூழலில் அவரின் டெல்லி பயணத்தில் இதுகுறித்த விளக்கம் ஏதும் கேட்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தென் மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு சென்னை வந்த நிலையில் அவரை நயினார் நாகேந்திரன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.