பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகபெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் தன்னை உடல் ரீதியான தாக்கியதாகவும், மனரீதியான துன்புறுத்தியதாகவும், தனக்கு மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்திருந்தாா். தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாவும் கட்சி மேலிடத்திற்கு புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, கருப்பு முருகானந்தம் "அந்தப் புகார் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. என் மீதான புகாரோ அல்லது குற்றச்சாட்டுகளோ என்னவென்று தெரியாமல் என்னால் எதற்கும் பதிலளிக்க முடியாது. விவரங்களை அறிந்த பிறகு, இது குறித்து விளக்கம் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.