தமிழக செய்திகள்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா- மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.வானதி சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை, தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கொரோனா உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT