திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியை என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு யாகத்தை முடித்துவிட்டு வெளியேற முயன்ற மத்திய இணையமைச்சர் எல். முருகனின் காரை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அதிரடியாக முற்றுகையிட்டனர்.
மத்திய இணை அமைச்சரின் கார் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், "பழனி தொகுதியை மீண்டும் பாஜகவிற்குப் பெற்றுத் தர வேண்டும்; அதற்குத் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என ஆவேசமாக முழக்கமிட்டனர். "பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்த எங்களை ஏமாற்றாதீர்கள்" எனத் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.