தமிழக செய்திகள்

பா.ஜ.க ஒரு அழிவு சக்தி..!- ஓசூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பாஜக முயற்சிக்கிறது.

ஓசூரில் நடைபெற்று வரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கார்கே ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செய்து கொடுத்த திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் உரிமைகளை திமுகவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.

மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளதற்கு அடித்தளமாக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது என தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும்போது ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.

நானும் சகோதரர் ராகுல்காந்தியும் இணைந்து திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்து வருகிறோம்.

ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பாஜக முயற்சிக்கிறது.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் திட்டங்களை கொடுத்துள்ளோம்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக குரல் கொடுக்க முடியாதவர் எடப்பாடி பழனிசாமி.

அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்த பதற்றத்தில் பேசி கொண்டிருக்கிறார் மோடி.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தேசிய கொடியை பின்னணியில் வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளைத் திட்டி பிரதமர் மோடி நேற்று உரையாற்றியுள்ளார்.

4 ஆண்டு காலம் ஆட்சி செய்த பழனிசாமியால் தனது சாதனையாக ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சியை திராவிட மாடல் ஆட்சியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

காரில் போகும்போது கிரிக்கெட் பார்த்தது தப்பு என பழனிசாமி சொல்லிருக்காரு.. காரில் நீங்க கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிட்டு போனீங்களே.. அதுதான் கேவலம்.

பாஜக ஒரு அழிவு சக்கி. தமிழ்நாட்டில் சங்கிப் படை உள்ளே நுழைந்தாலே சர்வ நாசம்தான்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.