தமிழக செய்திகள்

ஜனநாயகன் "லீக்" ஆனதற்கும் பா.ஜ.க.-விற்கும் தொடர்பு இல்லை- அண்ணாமலை

ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியானாலும் திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன்.

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கரூரில் 4 தொகுதிகளையும் என்டிஏ வெல்லும்.

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி படுதோல்வி அடைவார்.

ஜனநாயகன் திரைப்படம் வெளியானதற்கு போஸ்ட் புரடக்‌ஷன் நிறுவனம்தான் பொறுப்பு.

ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியானாலும் திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன்.

ஜனநாயகன் ஆன்லைன் ரிலீசுக்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.