தமிழக செய்திகள்

கொடைக்கானலில் குவியும் அரியவகை பறவை இனங்கள்

பறவைகள் மேற்குவங்க மாநில பகுதிகளில் அதிக அளவில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அரியவகை பறவைகள் கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள மரங்களில் தென்படுவதால் சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

கொடைக்கானலில் தற்போது நிலவி வரும் இதமான சூழல் மற்றும் மிதமான சாரல் மழை காரணமாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் அரியவகை பறவை இனங்கள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளன. தற்போது ஏரி பகுதியில் உள்ள மரங்களில் பெலிகனிபார்மசு வகையை சேர்ந்த பறவையினம் அதிக அளவில் காணப்படுகிறது. இவ்வகை பறவை அர்டெயிடே குடும்ப வகையை சார்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அர்டியோலா கிரேயி என்ற அறிவியல் பெயரும் உண்டு. தமிழில் குருட்டு கொக்கு, மடையான், குளத்துக் கொக்கு என்ற பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது.

பறவை

இந்தப் பறவை அமைதியாக அசையாமல் மரக்கிளைகளில் நிற்கும் பொழுது அதனை சுற்றியுள்ள கால சூழலுடன் நன்றாக ஒன்றி கலந்து விடும். அருகில் சென்றாலும் உடனே அங்கிருந்து பறந்து செல்லாமல் தாமதிப்பதால் இது குருட்டுத்தனமாக நடந்து கொள்வதாகக் கருதி இதற்கு குருட்டு கொக்கு என பெயரிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அரியவகை பறவைகள் கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள மரங்களில் தென்படுவதால் சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இவ்வகை பறவைகள் மேற்குவங்க மாநில பகுதிகளில் அதிக அளவில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT