தமிழக செய்திகள்

லாரி மோதி சென்னை வாலிபர் பலி

ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, அயனாவரம், பி.வி.தெருவை சேர்ந்தவர் தனுஷ்(வயது 27). இவரது நண்பரின் திருமணம் ஆந்திர மாநிலம் நகரியில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தனுஷ் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.

விபத்து

ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தனுசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளுவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீசார்

பின்னர் மேல் சகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சகிச்சை பலனின்றி தனுஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெண்ணாலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT