தமிழக செய்திகள்

வேலூர் பைக் விபத்தில் பெண் பலி

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூர் சத்துவாச்சாரி சுதந்திர பொன்விழா நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி அம்சவேணி (வயது65). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள பென்ட்லேண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது உறவினரை பார்ப்பதற்காக, தனது சகோதரருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே கையில் துணிப் பைகளுடன் பைக்கில் ஏறினார்.

பெண் பலி

அப்போது, நிலைதடுமாறி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்சவேணி பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT