விபத்து 
தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த வருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தம்புரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 69). இவர் இரவு சின்ன ஓபுளாபுரம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார்.

விபத்து

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வாலிபர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென பாலு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த பாலுவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீசார் வழக்கு பதிவு

அங்கு சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த வருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT