தமிழக செய்திகள்

அண்ணா அறிவாலயத்திற்குள் பீர்பாட்டில் வீச்சு- போலீசார் விசாரணை

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.போலீசார் விசாரணையில் கோவர்தன் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்து அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்களை வீசிய கோவர்தனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் கோவர்தன் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவரிடம் பீர் பாட்டில்களை வீசியது ஏன் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT