ஈரோடு:
ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட், சின்ன மார்க்கெட் உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, பெங்களூரு, ஊட்டி, தாளவாடி, ஒட்டச்சத்திரம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து பீன்ஸ் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தினசரி 2 டன் பீன்ஸ் வரத்தாகும் நிலையில், நேற்று ஒரு டன் மட்டுமே வரத்தானது. இதன் காரணமாக, கடந்த வாரம் கிலோ ரூ.85க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் நேற்று ரூ.120க்கு விற்பனையானது. இதனால், மார்க்கெட்டுகளுக்கு வரும் பொதுமக்கள் பீன்ஸ் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறியதாவது :-
கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், பெங்களூரு, தாளவாடி, ஒட்டச்சத்திரம், ஓசூர் போன்ற பகுதிகளில் பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று ஊட்டியில் இருந்து மட்டுமே, ஈரோடு காய்கறி மார்க்கெட்டுகளுக்கு பீன்ஸ் வரத்தானது. இதனால், கடந்த வாரம் ரூ. 85 முதல் ரூ.92 வரை விற்பனையான பீன்ஸ், நேற்று ரூ.120க்கு விற்பனையானது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
பிற காய்கறிகள் விலை விபரம்: ( கிலோ)
தக்காளி ரூ.50, கத்தரிக்காய் ரூ.45, வெண்டை ரூ.45, புடலங்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.58, சுரைக்காய் ரூ.15, சாம்பல் பூசணி ரூ.18, சர்க்கரை பூசணி ரூ.16, அவரைக்காய் ரூ.75, கொத்தவரை ரூ.45, பாகல் ரூ.40, முள்ளங்கி ரூ.28, குண்டு மிளகாய் ரூ.44, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.45, முருங்கை ரூ.40, தேங்காய் ரூ.25-40, சேனை ரூ.24, இஞ்சி ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ.50, பீட்ருட் ரூ.66க்கு விற்பனையானது.