தமிழக செய்திகள்

"தயாராக இருங்கள்..!"- த.வெ.க மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு

தமிழகம் முழுவதும் த.வெ.க விரைவில் தேர்தல் பிரச்சாரம் நடத்தவுள்ளது.

மாலை மலர்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு வாரத்தில் தேர்தலுக்கான வேட்பாளர் உறுதிமொழி பத்திரத்தை தயார் செய்து தலைமை கழகத்தில் அளிக்க வேண்டும் என என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் என்பதால் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள மாவட்ட செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.