தமிழக செய்திகள்

தயார் நிலையில் இருங்கள்.. முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு செய்வேன்- அமைச்சர் ராஜ்மோகன்

அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டு பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஒரு அமைச்சராக இல்லாமல், சகோதரனாக சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கூடத்திலும் எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு முன்னறிவிப்புமுன்பு ஆய்வு செய்ய வருவேன்.

இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து எதிகாரிகளும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும், தலைமை ஆசியர்கள் உள்பட அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டு பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலத்தை நாம் தீர்மாணிக்கின்ற இடத்தில் இருக்கிறோம். அப்போ, ஆய்வுக்கு சொல்லிவிட்டு வருவதால் அல்லது சம்பரதாயத்திற்கு வருவதாக இருக்க கூடாது.

அதனால், 38 மாவட்டங்களுக்கும் எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்வோம். எல்லா நேரத்திலும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டு பொறுப்புணர்ச்சி என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.