உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிற்றாறுகள் வாயிலாக நீர் வரத்து கிடைக்கிறது.
சமீபத்தில் மலைத்தொடரில் பெய்த மழையால் சிற்றாறுகளுக்கும் பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குருமலை பகுதியில் மலை பெய்தது. அங்கிருந்து அருவிக்கும் நீர்வரத்து கிடைக்கும். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முன்தினம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
நேற்று காலையில் அருவியில் நீர்வரத்து சீரானது. இதை அடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.