தமிழக செய்திகள்

மீஞ்சூரில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை

கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

மாலை மலர்

பொன்னேரி:

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக தச்சூரிலிருந்து பொன்னேரி சாலைக்கும் மீஞ்சூர் அத்திப்பட்டு, எண்ணூர் துறைமுகத்தின் சாலையில் இருந்து தச்சூர் கூட்டு சாலைக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.

அதனை மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். இதில் பொன்னேரி ஆய்வாளர் சின்னத்துரை மீஞ்சூர் டிராபிக் உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.