மணிமுத்தாறு அருவி 
தமிழக செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை

மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்றும் 4-வது நாளாக அந்த தடை நீடிக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துவிட்டது. எனினும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்துள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையில் இன்று நீர்மட்டம் 75.50 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 70.96 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 718.912 கன அடி நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 431 கன அடி நீர்வரத்து உள்ளது. அணைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

பாபநாசம்

பாபநாசம் அணையில் 33.90 சதவீதமும், மணிமுத்தாறு அணையில் 29.06 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை நீடிக்கிறது. கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்றும் 4-வது நாளாக அந்த தடை நீடிக்கிறது.

SCROLL FOR NEXT