தமிழக செய்திகள்

கவியருவியில் குளிக்க 3-வது நாளாக தடை- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தொடர் கனமழையால் அங்குள்ள ஓடைகள், சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கவியருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 3-வது நாளாக நீடித்து வருவதால் அங்கு நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியாறு அருகே கவியருவி அமைந்து உள்ளது.

இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்தமாக குளித்துவிட்டு செல்கின்றனர்.

கவியருவி

வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால் அங்குள்ள ஓடைகள், சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் சோலையாறு அணை உள்ளிட்ட பி.ஏ.பி. திட்டத்தின்கீழ் உள்ள தொகுப்பு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மழை

மேலும் வால்பாறை எஸ்டேட், அட்டகட்டி, வாட்டர்பால்ஸ் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கவியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் அந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் நேற்றுடன் 2-வது நாளாக தடை விதித்து இருந்தனர்.

3-வது நாளாக தடை

இந்த நிலையில் கவியருவியில் தண்ணீர் இன்றும் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அந்த அருவியில் குளிக்க வனத்துறையின் தடை இன்றுடன் 3-வது நாளாக தொடருகிறது. மேலும் கவியருவிக்கு செல்லும் பாதை, தடுப்புகளை வைத்து மூடப்பட்டுள்ளது.

கவியருவி

கோவை கவியருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 3-வது நாளாக நீடித்து வருவதால் அங்கு நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே கோவை வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கவியருவியில் தண்ணீர் வரத்து இயல்புநிலைக்கு வரும்போது சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT