தமிழக செய்திகள்

பக்ரீத் பண்டிகை - புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் ஆடுகள் விற்பனை அமோகம்

பண்டிகை நெருங்குவதால் ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு வரும் 28-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடுகள் விற்பனை வழக்கம்போல் மிக அமோகமாக நடைபெற்று வருகிறது. பண்டிகை நெருங்குவதால் ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.

ஆடுகளின் எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பக்ரீத் குர்பானிக்காக பிரத்யேகமாக வளர்க்கப்படும் பிரம்மாண்டமான 'கடா' ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையாகின்றன. ஆட்டு தொட்டியில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.