அகஸ்தீஸ்வரத்தில் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு வளையல்கள், சேலைகள் மற்றும் மங்கல பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டு வழங்கி விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அகஸ்தீஸ்வரம் வட்டாரத்திற்கு உட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ராமேரி வரவேற்புரையாற்றினார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு வளையல்கள், சேலைகள் மற்றும் மங்கல பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டு வழங்கி தொடங்கி வைத்தார்.
கனகபாய், அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர், அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் சீதா கியோர் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் எடுத்துக்கூறினர்
நிகழ்ச்சியில் வட்டார தலைவர் டேனியல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், பேராசிரியர் முருகேசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும், துறைசார்ந்த அரசு அலுவலர்களும், அங்கன்வாடி பணியாளர்களும் கலந்து கொண்டனர்.