தமிழக செய்திகள்

பச்சிளம் பெண் குழந்தை பையில் வைத்து சாலையோரம் வீச்சு

பிறந்து சுமார் 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பச்சிளம் பெண் குழந்தையை பையில் வைத்து சாலையோரத்தில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தை வீசப்பட்டதா? என்பது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கருப்பு கோவில் கொட்டம் பகுதியில் சாலையோரத்தில் பை ஒன்று கிடந்தது. அந்த பைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று பையை திறந்து பார்த்தனர்.

ஆஸ்பத்திரி

அப்போது, பிறந்து சுமார் 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். தற்போது பெண் சிசு நல்ல நிலையில் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை

இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தையை திருச்சி மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பையில் வைத்து சாலையோரத்தில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தை வீசப்பட்டதா? என்பது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT