தமிழக செய்திகள்

பொன்னேரி நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு

நகராட்சி சுகாதார ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குபவர்கைள பாராட்டி அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டினர்.

வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை, மக்கும்குப்பை- மக்காத குப்பை, சுகாதார கழிவுகள், சிறப்பு கழிவுகள் என 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொன்னேரி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் சுமார் 12 டன் மக்கும் குப்பை, மக்காத குப்பை வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து மறுசுழற்சி மற்றும் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பொன்னேரி நகராட்சி

இந்நிலையில் பொன்னேரி நகராட்சி ஆணையர் கீர்த்தனா ஆலோசனையின்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை, மக்கும்குப்பை- மக்காத குப்பை, சுகாதார கழிவுகள், சிறப்பு கழிவுகள் என 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதார பணியாளர்கள்

இந்த நிலையில் நகராட்சி சுகாதார ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குபவர்கைள பாராட்டி அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டினர். அப்போது சுகாதார ஆய்வாளர் சாமுவேல் மற்றும் சுகாதார பணியாளர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT