வழிப்பறி மற்றும் திருட்டு தொடர்பாக ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த கார்த்தி, கார்த்திகேயன், பாலாஜி, தண்டையார் பேட்டையை சேர்ந்த தீபக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
ஆவடி அடுத்த மோரை 400 அடி சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சுரங்கப்பாதை அருகே கடையில் டீக்குடித்து கொண்டு இருந்த ஆறுமுகம் என்பரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தாக்கி செல்போனை பறித்தனர். இதேபோல் கருணாகரசேரி ஆற்றுப்பாலம் அருகே பட்டாபிராமை சேர்ந்த ஜெயராமன் என்பரை மர்மகும்பல் தாக்கி ஒரு பவுன் மோதிரை பறித்தனர். வீராபுரம் முருகன் கோவில் தெருவில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியான நர்புயான் என்பவரை ஒரு கும்பல் தாக்கியது. மேலும் கோலப்பஞ்சேரி, பஜனை கோவில் அருகே ராஜி என்பவரது கார், மற்றும் மோட்டார் சைக்கிள் திருடு போனது.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களை தொடர்ந்து ஆவடி போலீஸ்கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவுப்படி இணை கமிஷனர் சிவகுமாரின் அறிவுறுத்தலில் மாவட்ட துணை ஆணையாளர் வினோத் சாந்தாராம் மேற்பார்வையில், காவல் உதவி ஆணையாளர் சம்பத் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு தொடர்பாக ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த கார்த்தி, கார்த்திகேயன், பாலாஜி, தண்டையார் பேட்டையை சேர்ந்த தீபக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.