தமிழக செய்திகள்

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கவனத்திற்கு... இந்த ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும், மாற்று அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் வியாழக்கிழமையன்று (ஏப்.17) நடைபெற உள்ளது. மே.4 வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வருகின்றன.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மாற்று அடையாள ஆவணங்களை காட்டி வாக்கு செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆதார் அட்டை, நூறுநாள் பணி அடையாள அட்டை, அஞ்சலக கணக்குப் புத்தகம் (புகைப்படத்துடன்), மருத்துவக் காப்பீடு திறனட்டை, ஓட்டுநர் உரிமம், பேன் கார்டு, ஆர்.ஜி.ஐ-ஆல் வழங்கப்பட்ட திறனட்டை, இந்திய பாஸ்புக், ஓய்வூதிய ஆவணம்(புகைப்படத்துடன்),

பணி அடையாள அட்டை (அரசு, பொதுத்துறை, வரையறுக்கப்பட்ட நிறுவனம்), நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் அட்டை, மாற்று திறனாளிகளுக்கான தேசிய அட்டை ஆகியவற்றை கொண்டு வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT