தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை சென்னைக்கு புறப்படும் பயணிகளின் கவனத்திற்கு...

பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை சென்னை எழும்பூருக்கு புறப்படும் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

18.05.2026 (இன்று) மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த ரெயில் எண் 12634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரெயில், அதன் இணை ரெயில் தாமதமாக வருவதன் காரணமாக (2 மணி 15 நிமிடங்கள் தாமதம்), கன்னியாகுமரியிலிருந்து 20.15 மணிக்கு புறப்படும் வகையில் மறுநேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கேற்றவாறு பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.