கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி 
தமிழக செய்திகள்

அரவக்குறிச்சி அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் அதிகாலையில் கொள்ளை முயற்சி

வங்கிக்குள் நுழைந்த நபர்கள் பணத்தை திருட முயன்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தானியங்கி ஆபத்து அலாரம் திடீரென சத்தம் எழுப்பியது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் அதிகாலை 1 மணியளவில் முகமூடி அணிந்த நால்வர் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து பணம் திருட முயன்றனர். தானியங்கி ஆபத்து அலாரம் செயல்பட்டு சத்தம் எழுந்ததால், பிடிபடுவோம் என்ற பயத்தில் அவர்கள் காலி கையுடன் தப்பிச் சென்றனர். சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில், முகமூடி அணிந்த 4 நபர்கள் வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.

தப்பியோட்டம்

வங்கிக்குள் நுழைந்த நபர்கள் பணத்தை திருட முயன்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தானியங்கி ஆபத்து அலாரம் திடீரென சத்தம் எழுப்பியது. அலாரம் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த நபர்கள், பிடிபடுவோம் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் வங்கியில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் எதுவும் சேதமடையாமல் தப்பியதாக வங்கி பணியாளர்கள் தெரிவித்தனர்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார், விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT