சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில்," திமுக சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்,
சிங்கப்பெண் படை புதிய திட்டம் இல்லை. யூனிபார்ம் மாற்றி இருக்கிறார்கள்.
இயக்குனர் அட்லீ பல சிறந்த படங்களின் காட்சிகளை எடுத்து படம் எடுப்பார். அதுபோல எங்கள் ஆட்சியின் திட்டங்களை எடுத்து ஆட்சி நடத்துகிறார்கள்.
தமிழ் திரையுலகில் இருந்து திரைப்படங்களை விடுத்து மக்கள் பணிக்காக அரசியல் வந்துள்ளவர் முதலமைச்சர்.
ஆனால் அரசியலிலே இருந்த சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் அட்லீ குறித்து பேசும்போதெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது.
சில விஷயங்களை வம்புக்காக பேசுவது என்பது எப்படி சரியாக இருக்கும்.
இந்த சட்டமன்றத்தை பாருங்கள். காலங்கள் மாறிவிட்டது காட்சி மாறிவிட்டது.
அன்றும் இன்றும் என்றும் மக்களுக்கு ஒரு குணம் இருக்கிறது. மாநில உரிமை, தமிழ் மொழி, எங்கள் உயிருக்கும் மேல் தமிழ் எங்கள் மூச்சு.
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டது என்றும் அதையே பின்பற்றுவோம்.
ஆக்கப்பூர்வமாக ஆட்சி தர என்ன பணியோ அதை பாருங்கள். பொதுக்கூட்ட மேடையில் பேசியவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் உள்ளோம்.
எங்களுடன் சேர்ந்து கூட்டணியில் வெற்றிபெற்றவர்களுடன் தான் கைகோர்த்து ஆட்சி அமைத்துள்ளீர்கள்.
வருங்காலத்தில் தனியாக நின்று வாக்குகளைப் பெற நீங்கள் தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு காரசார விவாதம் நடைபெற்றது