தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்ற, பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாதன் அர்லேகரை நேரில் சந்தித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி தொடங்குகிறது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதனடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இக்கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.