சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டசபை தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், தொகுதி பணியை தொடர்ந்து மேற்கொள்ளவும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாகனம் வழங்கப்படும்.
* வாகனத்திற்காக மாதம் தோறும் ரூ.75,000 வாகனப்படி, ஓர் உதவியாளரை நியமித்து ஊதியம் தர மாதத்திற்கு ரூ.25ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டசபை தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி: அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி
அமைச்சர் ராஜ்மோகன்: முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அமைச்சர் ஷாஜகான்: முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
எம்எல்ஏ காமராஜ்: முதலமைச்சர் கொடுக்கும் காரில்தான் செல்வதே கெத்து.
பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றனர்.