தமிழக செய்திகள்

கரூர் விவகாரத்தில் தவெக எதிர்த்த அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்!

வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்னாள் தலைமைச் செயலர் முருகானந்தம் உள்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், த. உதயச்சந்திரன் மற்றும் அமுதா ஐ.ஏ.எஸ். ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கர்க், உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயர் நீதிமன்றத்தால் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் அஸ்ரா கர்க்.

அப்போது தவெக இவரை எதிர்த்தநிலையில் தற்போது உளவுத்துறைக்கு மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.