தமிழக செய்திகள்

‘கரூரை பொறுத்தவரை எனக்கு எந்த கவலையுமில்லை’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இம்முறை கரூர், கோவை இரண்டும் நம் வசம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுமாலை கரூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

“கரூரைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏன் என்று உங்களுக்கே தெரியும். என்னுடைய இனிய சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுடைய மாவட்டம் இது. நிச்சயம் நூறு சதவீதம் வெற்றி உறுதி. கரூரில் கழகக் கூட்டணியின் வெற்றியை அவர் எப்போதோ உறுதி செய்த காரணத்தினால்தான், கோவை மாவட்டத்தில் நிற்கச் சொல்லி அவருக்குப் பொறுப்பு கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள். அவர் புகுந்த வீடுதான் கோவை. அவர் பிறந்த கரூரை என்றும் மறக்கமாட்டார். அடுமட்டுமல்ல, பல சோதனைகளைத் தாண்டி, சாதனை படைப்பவர் செந்தில் பாலாஜி. இந்த முறை கரூர், கோவை இரண்டுமே நம் வசம்தான்.

ஏன், தமிழ்நாடு மொத்தமும் நாம்தான். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200 தொகுதிகளுக்குக் குறையாத வெற்றி பெறப்போகிறது.” என தெரிவித்தார்.