தமிழக செய்திகள்

உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இட விவகாரம்: உண்மைக்கு மாறான தகவலை உதயநிதி கூறுகிறார் - அருண்ராஜ்

151 மருத்துவ இடங்களை மத்திய அரசிடம் சரண்டர் செய்ய தவெக அரசு மறுத்தது.

மருத்துவ உயர் படிப்பில் 151 இடங்களை மத்திய அரசிடம் சரண்டர் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி இருந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அருண் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

* திமுக ஆட்சியில் மருத்து இடங்களில் மீள் வழங்கப்பட்டன.

* 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் சரண்டர் செய்யப்பட்டன.

* நிரப்பப்படாத இடங்களை சரண்டர் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

* 151 மருத்துவ இடங்களை மத்திய அரசிடம் சரண்டர் செய்ய தவெக அரசு மறுத்தது.

* 2025-ல் நிரப்பாத 152 இடங்கள் இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டதாக உதயநிதி கூறியது உண்மைக்கு புறம்பானது.

* 151 இடங்களை மீள் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* நம் மாநிலத்திற்கு ஒதுக்கிய இடங்களை தமிழக மருத்துவர்கள் மூலம் நிரப்ப வேண்டும் என்பதே முதலமைச்சர் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.