தமிழக செய்திகள்

அருமனை அருகே காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனிஷாவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருமனை அருகே களியல்கிலாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவரது மனைவி அனிஷா (வயது42). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அருமனையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனை

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததால், திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அனிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார்

இதுகுறித்து அனிஷா சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மனை நிர்வாகம் மீது அவரது கணவர் சுனில்குமார் கடையல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனிஷாவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT