தமிழக செய்திகள்

அருள் விக்னேஷ் கைது: அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - இபிஎஸ்

இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி காவல்துறையால் கைது செய்யப்பட்டது அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அருள் விக்னேஷ் கைது

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி காவல்துறையால் கைது செய்ய்ப்பட்டுள்ளார்

இந்தப் புகார் குறித்து விசாரிக்கத் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடுகளுக்குப் பிறகே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண் அதிகாரிக்கு உரிய நீதியை பெற்று தருவோம்

முதலமைச்சர் விஜய்க்கு just a Reminder- நீங்க கைது பண்ணல நாங்க கைது பண்ண வெச்சோம் இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்

இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்

என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT