அர்ஜூன் சம்பத் 
தமிழக செய்திகள்

3 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்துள்ள பிரகாஷ் ராஜ் ஓட்டு திருடன்- அர்ஜூன் சம்பத் தாக்கு

கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் பணிஇடை நீக்கம், சஸ்பெண்டு மட்டும் போதாது. மேலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அர்ஜூன் சம்பத், பிரகாஷ் ராஜ் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். 3 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்துள்ள பிரகாஷ் ராஜ் ஓட்டு திருடன் என குற்றம் சாட்டினார். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்க்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனவும், தீபாவளி பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தேனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு

தீபாவளி பண்டிகை என்பது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகும். ஆனால் இதுபோன்ற பண்டிகை நாட்களில் அரசு இலக்கு வைத்து மதுபானங்களை விற்பனை செய்வது கண்டனத்துக்கு உரியது.

எனவே தீபாவளிக்கு முன்பும், பின்னரும் என 15 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மேலும் அன்னிய நாட்டு பொருட்களை வாங்க கூடாது. இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க சிவகாசி பட்டாசுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

ஓட்டு திருடன்

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை என்பது வெளிப்படையாக இந்தியா முழுவதும் நடைபெற்றது. எந்த ஒரு வாக்காளரும் விடுபடாத வகையிலும், போலி வாக்காளர் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையிலும், பட்டியல் தயாரிக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கையால்தான் கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் த.வெ.க.வும் ஆட்சியமைத்துள்ளன. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்க்கும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள த.வெ.க. இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் இது குறித்து தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். 3 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்துள்ள அவர் ஒரு ஓட்டு திருடன். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் யாரேனும் வாக்குரிமையை இழந்திருந்தால் அவர்களை அழைத்து வரட்டும். அவர்கள் ஒவ்வொரு நபருக்கும் ரூ.1000 பரிசு தருகிறோம். எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்க்கும் கம்யூனிஸ்டு கட்சிகளை தடை செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவை த.வெ.க. அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் பணிஇடை நீக்கம், சஸ்பெண்டு மட்டும் போதாது. மேலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT