தமிழக செய்திகள்

பாடியில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் திருப்பி கேட்டு ஊழியர்களுடன் வாக்குவாதம்

10 ரூபாய் திருப்பி தர ஊழியர்கள் மறுப்பதாக மதுபிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.

மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் விற்பனையாளருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் கடையை அடைத்து புறப்பட்டதாக தெரிகிறது.

பாடி, காந்தி சாலையில் டாஸ்மாக் மதுக்கடை (எண்8799) செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பெறப்பட்ட ரூ.10-யை திருப்பி கேட்டு மதுபிரியர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

டாஸ்மாக்

இதனால் மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் விற்பனையாளருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் கடையை அடைத்து புறப்பட்டதாக தெரிகிறது.

மது பிரியர்கள்

அடைக்கப்பட்ட டாஸ்மாக் கடை வாசலில் மது பிரியர்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தலையிட்டு மதியம் 3 மணியளவில் மீண்டும் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. 10 ரூபாய் திருப்பி தர ஊழியர்கள் மறுப்பதாக மதுபிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.

SCROLL FOR NEXT